ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்வு! ரூ. 86.33
நேற்று 13 காசுகள் சரிந்து ரூ. 86.58 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 22) 25 காசுகள் உயர்ந்து ரூ. 86.33 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று 13 காசுகள் சரிந்து ரூ. 86.58 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாகவே உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தொடர்ச்சியாக ரூபாய் மதிப்பு நிலையற்றத் தன்மையைக் கொண்டுள்ளது.
இதனிடையே இன்றைய வணிகத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 86.56 காசுகளாகத் தொடங்கியது. வணிக நேர மத்தியில் 86.30 வரை ஏற்றம் கண்டது. நிலையற்ற தன்மை நீடித்ததால் அதிகபட்சமாக ரூ. 86.71 காசுகள் வரை சரிந்தது.
வணிக நேர முடிவில் நேற்றைய மதிப்பில் இருந்து 25 காசுகள் உயர்ந்து ரூ. 86.33 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையிலும் ஏற்றம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 566.63 புள்ளிகள் உயர்ந்து 76,404.99 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.75 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130.70 புள்ளிகள் உயர்ந்து 23,155.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.57 சதவீதம் உயர்வாகும்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...