
வணிக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தை இன்று (ஜன. 22) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 650 புள்ளிகளும் நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்தது.
அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 2% வரை ஏற்றம் கண்டன. வரவிருக்கும் மாதங்களில் பங்குச் சந்தை நிலையான இடத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாலர் பலவீனத்தால் இன்று பங்குச் சந்தை சற்று ஏற்றம் கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 566.63 புள்ளிகள் உயர்ந்து 76,404.99 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.75 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 130.70 புள்ளிகள் உயர்ந்து 23,155.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.57 சதவீதம் உயர்வாகும்.
வணிக நேரத் தொடக்கத்தில் 76,114 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 76,463 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாகச் சரிந்து 75,816 என்ற அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 566 புள்ளிகள் உயர்ந்து 76,404 புள்ளிகளாக நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 9 நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.
அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 3.10% உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக டிசிஎஸ் 3%, டெக் மஹிந்திரா 2.65%, சன் பார்மா 2.06%, பஜாஜ் ஃபின்சர்வ் 1.54%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.45%, எச்டிஎஃப்சி வங்கி 1.44%, எச்சிஎல் டெக் 1.41% உயர்ந்திருந்தன.
இதேபோன்று டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எல்&டி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
நிஃப்டி நிலவரம்
நிஃப்டியைப் பொறுத்தவரை, வணிக நேரத் தொடக்கத்தில் 23,099 புள்ளிகளுடன் தொடங்கி, அதிகபட்சமாக 23,169 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சரிந்து அதிகபட்சமாக
22,981 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 130 உயர்ந்து 23,155 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில், பாம்பே பும்ரா, பஜாஜ் ஹோல்டிங்ஸ், அவந்தி ஃபீட்ஸ், ஃபைவ்ஸ்டார், விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகியவை ஆதாயப் பட்டியலில் முதன்மை இடங்களில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.