சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.86.33 ஆக முடிவு!

டாலர் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்குகளில் மெத்தன போக்கும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை அதிக அளவில் எடைபோட்டதால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்தது.

Published On :

மும்பை: டாலர் தேவை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்குகளில் மெத்தன போக்கும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை அதிக அளவில் எடைபோட்டதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 11 காசுகள் சரிந்து ரூ.86.33 ஆக முடிந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்தது முடிந்த நிலையில், அதிபர் 'டிரம்பின்' நிச்சயமற்ற கட்டணங்கள் குறித்த முடிவினால் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் சரிந்து தொடங்கியது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக அந்நிய நிதி வெளியேற்றங்களால் முதலீட்டாளர்களின் உணர்வுகளை இது வெகுவாக பாதித்தது.

அந்நிய நேரடி முதலீடுகளை மீண்டும் அதிகரிக்கும் நோக்கமாகக் கொண்ட சாதகமான நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் சந்தை உணர்வையும், இந்திய ரூபாயின் மதிப்பு வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூபாய் ரூ.86.35 ஆக தொடங்கி, அதிகபட்சமாக ரூ.86.33 ஆகவும், குறைந்தபட்சமாகவும் ரூ.86.45 ஆகவும் சரிந்தது. முடிவில் 11 காசுகள் சரிந்து ரூ.86.33 ஆக நிலைபெற்றது.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.86.22 ஆக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.