/

ரூ. 61,000-ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image
தங்கம் விலை (கோப்புப்படம்)- din
Updated On :31 ஜனவரி 2025, 4:14 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 61,000-ஐ நெருங்கியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 22 ஆம் தேதி ரூ.60,000-ஐ கடந்து வரலாற்று உச்சம் அடைந்தது. அதன்பிறகு சிறிது ஏற்றம், இறக்கம் இருந்தாலும் ரூ. 60,000-க்கு குறையாமல் உள்ளது.

புதன்கிழமையான நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து ரூ.60,760-க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,610-க்கும் ஒரு சவரன் ரூ. 60,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 106-க்கும் கிலோ ரூ. 1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.