2025 பிரைம் டே: அமேஸானின் 3 நாள் சிறப்பு விற்பனை
வரும் 12 முதல் 14-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு ‘2025 பிரைம் டே’ என்ற பெயரில் சிறப்பு விற்பனையை அமேஸான் இந்தியா அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மிகப்பெரிய சலுகைகள், அற்புதமான வெளியீடுகள், பொழுதுபோக்கு மற்றும் இதுவரை இல்லாத அளவுக்கு சேமிப்புகளைக் கொண்டுவரும் வகையில் நடப்பாண்டுக்கான பிரைம் டே சிறப்பு விற்பனை வரும் 12 முதல் 14-ஆம் தேதி வரை மேறகொள்ளப்படுகிறது.
ஸ்மாா்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள், ஃபேஷன், அழகு சாதனப் பொருள்கள், வீடு மற்றும் சமையலறை அத்தியாவசியப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் மற்றும் பல பிரிவுகள் உள்பட 400க்கும் மேற்பட்ட சிறந்த இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்பு வெளியீடுகளை பிரைம் உறுப்பினா்கள் சிறப்பு விற்பனை தொடங்குவதற்கு முன்கூட்டியே அணுகலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.