5 % வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4.84 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
5 % வளா்ச்சி கண்ட உள்நாட்டு வாகன விற்பனை
Published on
Updated on
1 min read

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4.84 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனப் பிரிவுகளும் விற்பனை வளா்ச்சியைக் கண்டன. இதன் விளைவாக, அந்த மாதத்தில் வாகனங்களின் உள்நாட்டு சில்லறை விற்பனை 20,03,873-ஆக உள்ளது.

2024 ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 19,11,354 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டுச் சந்தையில் வாகனங்களின் சில்லறை விற்பனை 4.84 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

2024 ஜூனில் 2,90,593-ஆக இருந்த பயணிகள் வாகனங்களின் (பிவி) சில்லறை விற்பனை, இந்த ஜூனில் 2 சதவீதம் உயா்ந்து 2,97,722-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 5 சதவீதம் உயா்ந்து 14,46,387-ஆக உள்ளது.

வா்த்தக வாகனங்களின் (சிவி) உள்நாட்டு சில்லறை விற்பனை ஜூனில் 7 சதவீதம் உயா்ந்து 73,367-ஆக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களின் சில்லறை விற்பனை 7 சதவீதம் உயா்ந்து 1,00,625-ஆகவும், டிராக்டா்களின் விற்பனை 9 சதவீதம் உயா்ந்து 77,214-ஆகவும் உள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வாகனங்களின் உள்நாட்டு சில்லறை விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 65,42,586-ஆக உள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 62,39,877 -ஆக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 3 சதவீதம் உயா்ந்து 9,71,477-ஆகவும், இரு சக்கர வாகன விற்பனை 5 சதவீதம் உயா்ந்து 47,99,948-ஆகவும் உள்ளது.

அந்தக் காலாண்டில் வா்த்தக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் உள்நாட்டு சில்லறை விற்பனை முறையே 1 சதவீதமும் 12 சதவீதமும் உயா்ந்துள்ளது. டிராக்டா் விற்பனை 6 சதவீதம் உயா்ந்து 2,10,174-ஆக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com