
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக முடிவு!
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர வரிகள் விதிப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக நிறைவு.

PTI Graphics
மும்பை: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர வரிகள் விதிப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67 ஆக நிறைவடைந்தது.
வெளிநாட்டு சந்தைகளில் அமெரிக்க டாலர் நிலையாக உயர்ந்ததும், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலருக்கு அருகில் இருந்ததும் இந்திய ரூபாயின் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.84ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.93 முதல் ரூ.85.65 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 6 காசுகள் உயர்ந்து ரூ.85.67ஆக நிறைவடைந்தது.
நேற்று (செவ்வாய்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ.85.73 ஆக முடிவடைந்தன.
Summary
The rupee appreciated by 6 paise to close at 85.67 against the US dollar on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






