மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 10: அறிமுக தேதி அறிவிப்பு

கூகுள் நிறுவனம் பிக்சல் 10 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
கூகுள் பிக்சல் 10
கூகுள் பிக்சல் 10 படம் / நன்றி - கூகுள்
Published on
Updated on
1 min read

கூகுள் நிறுவனம் பிக்சல் 10 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 10 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஏராளமான செய்யறிவு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இதனிடையே பிக்சல் 10 சிறப்பம்சங்கள், விலை, எப்போது வெளியாகும் என்பத் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை ஆக. 20-ல் நடக்கும் தனது அதிகாரப்பூர்வ கூகுள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நியூ யார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் வரிசைகள், பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என கூகுள் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

முன்னதாக, அக்டோபர் மாதத்தில் பிக்சல் சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே அறிமுகமாகவுள்ளன.

சிறப்பம்சங்கள்

  • கூகுள் பிக்சல் 10 வரிசை ஸ்மார்ட்போன் 6.3 அங்குலத்தில் அமோலிட் திரையுடன் வருகிறது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • டென்சோர் 5ஆம் தலைமுறை புராசஸர் கொண்டுள்ளது.

  • பின்புறம் 50MP முக்கிய கேமராவும் 13MP அல்ட்ரா வைட் கேமராவும், ஜூம் வசதிக்காக 11MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 11MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • 4700mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 37W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வையர் இல்லாமல் 15W வேகத்தில் சார்ஜ் செய்ய இயலும்.

  • 7 ஆண்டுகளுக்கு அப்டேட் செய்துகொள்ளும் வகையில் ஆன்டிராய்டு வழங்கப்பட்டுள்ளது.

  • தூசி, தண்ணீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் IP68 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கிரிப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

Summary

Google Confirms the Launch Date for Pixel 10 Series: Here’s What We Can Expect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com