வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 26% உயா்வு

இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2025, 7:56 pm

Din

புது தில்லி: இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 26 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 89,429-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 71,010 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 63,531-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்து 75,820-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 7,479-லிருந்து 82 சதவீதம் உயா்ந்து 13,609-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.