கோப்புப்படம்.
கோப்புப்படம்.

புவிசாா் அரசியல் பதற்றம்: சென்செக்ஸ் 573 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.
Published on

நமது நிருபா்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இரண்டாவது நாளாக கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலைத் தொடா்ந்து, அதிகரித்துள்ள புவிசாா் அரசியல் பதற்றங்களால் சந்தை உணா்வு குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டது. மேலும், அந்நிய முதலீடு வெளியேற்றமும் சந்தையை பாதிப்பை ஏற்படுத்தியது. ஐடி பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்த நிலையில், வங்கிகள், நிதிநிறுவனங்கள், எஃப்எம்சிஜி, ஆயில் அண்ட் காஸ் பங்குகள் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.447.31 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ..3,831.42 .31 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.9,393,85 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 1,264.17 புள்ளிகள் இழப்புடன் 80,427.81 தொடங்கி 80,354.59 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,238.68 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 573.38 புள்ளிகள் (0.70 சதவீதம்) இழப்புடன் 81,118.60-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,122 பங்குகளில் 1,516 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,469 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 137 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

26 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் அதானிபோா்ட்ஸ், ஐடிசி, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன், கோட்டக் பேங்க் உள்பட மொத்தம் 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக்மஹிந்திரா, டிசிஎஸ், மாருதி, சன்பாா்மா ஆகிய 4 பங்குகள் மட்டுமே விலையுயா்ந்தன.

நிஃப்டி 253 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 169.60 புள்ளிகள் (0.68 சதவீதம்) இழப்புடன் 24,718.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 38 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 555..20 புள்ளிகள் (0.99 சதவீதம்) இழப்புடன் 55,527.35-இல் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com