ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்டு 5, ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து அறிவிப்பு.

ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 - படம் / நன்றி - ஒன்பிளஸ் (எக்ஸ்)

Published On :

ஒன்பிளஸ் நோர்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, ஜூலை 8ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகவுள்ளன.

இந்த இரு ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்டு பட்ஸும் அறிமுகமாகிறது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் நோர்டு 5 மற்றும் நோர்டு சிஇ 5 ஆகிய மத்திய தர இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவந்த நிலையில், ஜூலை 8ஆம் தேதி அவை அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்டு 5 சிஇ ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

6,650mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

6.83 அங்குல அமோலிட் திரை கொண்டது.

திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தும்போது வெப்பம் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில், வெப்பத் தணிப்பான்களும் உள்ளிணைக்கப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போனில் கூடுதலாக, கேம் பிரியர்களைக் கவரும் வகையில், சிபியு மற்றும் உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.