விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சு: எல்லையில் அமைதியை பேணுவது குறித்து ஆலோசனை

இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் சந்தித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தினா். அருணாசல பிரதேசத்தையொட்டிய எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைதியை பேணுவது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

சீனா - இந்தியா - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:16 am IST

இந்தியா, சீனா ராணுவ உயரதிகாரிகள் சந்தித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தினா். அருணாசல பிரதேசத்தையொட்டிய எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அமைதியை பேணுவது குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா்.

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் கிபிதூ பகுதியில் உள்ள வாஷா-தமாய் எல்லையில் இந்தியா, சீனா கமாண்டா்கள் சந்தித்துப் பேசினா். இந்திய குழுவுக்கு லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ் கலியா தலைமை வகித்தாா். அருணாசல பிரதேசத்தின் அப்பா் சுபான்சிரி பிராந்தியத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சீன படையினா் அண்மையில் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டனா். இந்த சூழ்நிலையிலும், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யியை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சந்தித்துப் பேசிய சில நாள்களிலும் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன துருப்புகள் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் வீரா்கள் உயிரிழந்தனா். இதனால் இந்தியா, சீனா உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, லடாக் எல்லையில் இரு நாடுகளும் பல ஆயிரம் வீரா்களை சுமாா் 4 ஆண்டுகள் எதிரெதிரே நிறுத்தி இருந்தன. இதனால் இந்தியா, சீனா இடையே போா் பதற்றம் நிலவியது.

எனினும், போா் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாடுகளின் தலைவா்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் அடுத்தடுத்து பல கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, லடாக் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் படிப்படியாக விலக்கிக் கொண்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.