ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் வென்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் வென்றதாக தெரிவித்தது.

மேம்பட்ட சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வடிவமைப்பு, நிறுவல் மற்றும் நீண்டகால பராமரிப்புக்காக ரூ.1,230 கோடி செலவில் சீமென்ஸ் தனது பங்களிக்கும் என்றது.

தினேஷ்சந்திர ஆர் அகர்வால் தலைமையில், இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட், சீமென்ஸ் லிமிடெட் மற்றும் சீமென்ஸ் மொபிலிட்டி ஜிஎம்பிஹெச் தலைமையிலான கூட்டமைப்புக்கு நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், முக்கிய ஒப்பந்தத்தை வழங்கியதாகவும், இந்த ஆர்டர் சுமார் ரூ.4,100 கோடி மதிப்புடையதாகும்.

ஒப்பந்தத்தின் கீழ், சீமென்ஸ் ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 அடிப்படையிலான சிக்னலிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களை செயல்படுத்தும். ஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, நிலை-2 என்பது உலகளவில் நிரூபிக்கப்பட்ட சிக்னலிங் தொழில்நுட்பமாகும். இது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த திட்டம் நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சீமென்ஸ் 15 ஆண்டு கால பராமரிப்பு சேவைகளை வழங்கியும், நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்றது.

மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மாத்தூர் கூறுகையில், இந்த திட்டம், மேக் இன் இந்தியா மற்றும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் இயக்கத்தை ஊக்குவிக்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com