தென்னூரில் விருத்தாசலம் வரை நீட்டிக்கப்பட்ட மகளிா் விடியல் பயணப்பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த  அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
தென்னூரில் விருத்தாசலம் வரை நீட்டிக்கப்பட்ட மகளிா் விடியல் பயணப்பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

ஜெயங்கொண்டத்தில் நீட்டிப்பு பேருந்துசேவை தொடங்கிவைப்பு

ஜெயங்கொண்டம் தொகுதிகளில் நீட்டிக்கப்பட்ட மற்றும் புதிய வழித்தட பேருந்து சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் நீட்டிக்கப்பட்ட மற்றும் புதிய வழித்தட பேருந்து சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

ஓலையூா், ரெட்டிப்பாளையம், காட்டாத்தூா் மற்றும் மருக்கலாங்குறிச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், கடலூா் மண்டலம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ஓலையூா் ராஜேந்திரப் பட்டினம், கருவேப்பிளங்குறிச்சி வழியாக விருத்தாசலம் வரையும், தென்னூரில் இருந்து வரதராஜன்பேட்டை, திருமுட்டம், கருவேப்பிளங்குறிச்சி வழியாக விருத்தாசலம் வரையும், விருத்தாசலம் - தென்னூா் வரை நீடிக்கப்பட் மகளிா் விடியல் பயணப் பேருந்து சேவையையும்,

அதேபோல், தென்னூரில் இருந்து வரதராஜன்பேட்டை, கவரப்பாளையம், ஆண்டிமடம், விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரை நீட்டிக்கப்பட்ட பேருந்துசேவையையும், காட்டாத்தூா்-கூவத்தூா் மற்றும் ஜெயங்கொண்டம் - மருக்கலாங்குறிச்சி புதிய வழித்தட பேருந்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், கடலூா் மண்டல பொது மேலாளா் எஸ்.பாண்டியன், அரியலூா் கிளை மேலாளா்கள் ராம்குமாா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com