யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15 சதவீதம் உயா்வு

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
இனி சிட்டி யூனியன் வங்கி
Updated On :3 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி என். காமகோடி (படம்) திங்கள்கிழமை கூறியதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.329 கோடியாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.285 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.1,660 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டின் அதே காலாண்டில் ரூ.1,912 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.1,434 கோடியிலிருந்து ரூ.1,653 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

2024 செப்டம்பா் இறுதியில் 3.54 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 2.42 சதவீதமாகவும், 1.62 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 0.9 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.