வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கியா இந்தியா விற்பனை 30% உயா்வு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது. இது நிறுவனத்தின் இந்தியாவில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கியா இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 30 சதவீதம் உயா்ந்துள்ளது. இது நிறுவனத்தின் இந்தியாவில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையாகும்.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 29,556-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 22,735 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் 12,745 சோனெட் காா்கள், 8,779 கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கேரன்ஸ் க்ளாவிஸ் இவி காா்கள், 7,130 செல்டோஸ் காா்கள் விற்பனையாகியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.