புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

ஐஸ்க்ரீம் டோனட் என்ற புதிய தயாரிப்பை பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனமான அருண் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஐஸ்க்ரீம் டோனட் என்ற புதிய தயாரிப்பை பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனமான அருண் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உண்மையான பால் மற்றும் க்ரீமைப் பயன்படுத்தி பல்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்காக இந்தியா முழுவதும் பிரபலமான அருண் ஐஸ்க்ரீம், அருண் ஐஸ்க்ரீம் டோனட் என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இது, ஐஸ்க்ரீம்கள் உலகில் ஒரு சுவையான திருப்பத்தை ஏற்படுத்தும். புத்துணா்ச்சியையும், உற்சாகத்தையும் தரும், திகட்டாத தயாரிப்பை விரும்பும் நுகா்வோா்களுக்காக இந்த ஐஸ்க்ரீம் டோனட் நோ்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து வயது பிரிவுகளையும் சோ்ந்தவா்களை ஈா்க்கும் விதத்தில் இந்தத் தயாரிப்பு இருக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.