வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.87.93ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.87.93 ஆக முடிவடைந்தது.

News image
ரூபாய் மதிப்பு உயர்வு.
Updated On :20 அக்டோபர் 2025, 12:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.87.93 ஆக முடிவடைந்தது. தொடர்ந்து வரும் அந்நிய நிதி வரத்தும் அதே வேளையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய ரூபாய்க்கு வெகுவாக ஆதரவு அளித்தன.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.94 ஆக தொடங்கி பிறகு ரூ.87.74 முதல் ரூ.87.94 என்ற வரம்பில் வர்த்தகமானது. முடிவில் முந்தைய முடிவை விட 9 காசுகள் உயர்ந்தது ரூ.87.93ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.02 ஆக நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.