கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இனி புகைப்படங்களை விடியோவாக மாற்றலாம்! அறிமுகமானது கூகுள் வியோ 3.1 லைட்!

தரவுகளை உள்ளிடுவதன் மூலம் புகைப்படங்களை விடியோவாக மாற்றும் புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறித்து...

Google Veo 3.1 Lite

கூகுள் வியோ 3.1 லைட் - படம் / நன்றி - Google Veo 3.1 Lite

Published On :

விருப்பப்பட்ட தரவுகளை உள்ளிடுவதன் மூலம் புகைப்படங்களை விடியோவாக மாற்றும் வியோ 3.1 லைட் என்ற புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு உள்ள வியோ 3.1 ஃபாஸ்ட் கருவியை விட குறைந்த விலையில் நிறைவான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது வியோ 3.1 லைட்.

எனினும், தரத்தில் எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனியார் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரிய அளவிலான பயன்பாடுகளுக்கு கூகுள் வியோ 3.1 லைட் ஏற்றதாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

ஜெமினி ஏபிஐ மற்றும் கூகுள் ஏஐ ஸ்டூடியோ ஆகியவற்றில் சிறப்புக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் வியோ 3.1 லைட் கருவியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வியோ 3.1 லைட் கருவியின் விலையானது விடியோவின் நீளம் மற்றும் உள்ளீட்டுத் தீர்வின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களைப் பதிவிட்டு வேண்டிய தேவைகளை உள்ளீடு செய்வதன் மூலம் 4, 6, 8 விநாடிகளுக்கான விடியோவை உருவாக்க முடியும்.

720p திறனுடைய விடியோவை உருவாக்கினால் ஒரு விநாடிக்கு 0.05 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1080p திறனுடைய விடியோவுக்கு விநாடிக்கு 0.08 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட விடியோ ஃபார்மட்களுக்கு பொருந்தும் வகையில் வியோ 3.1 லைட் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு, லேண்ட்ஸ்கேப் - 16:9, போர்ட்ரெய்ட் - 9:16 விடியோக்களையும் உருவாக்கலாம்.

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது தேவையான விநாடிகளுக்கு விடியோவை நீட்டித்துக்கொள்ளலாம். அதற்கேற்ப தரவுகளைக் டெக்ஸ் மூலம் உள்ளீடு செய்தால் போதும்.

வியோ 3.1 லைட் அறிமுகம் செய்வதோடு மட்டுமின்றி, வியோ 3.1 ஃபாஸ்ட் கருவியின் பயன்பாட்டுக் கட்டணத்தை குறைக்கவும் கூகுள் முடிவு செய்துள்ளது.

Summary

Google Veo 3.1 Lite launched: How to create videos using text and images with this new AI model

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.