உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

இந்தியாவில் 5.5ஜி இணைய சேவை எப்போது கிடைக்கும்?

5ஜி இணைய சேவையின் மேம்படுத்தப்பட்ட வேகத்துடன் 5.5 ஜி இணைய சேவை (5ஜி அட்வான்ஸ்ட்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

News image

5.5ஜி

Updated On :8 ஆகஸ்ட் 2026, 3:06 pm IST

5ஜி இணைய சேவையின் மேம்படுத்தப்பட்ட வேகத்துடன் 5.5 ஜி இணைய சேவை (5ஜி அட்வான்ஸ்ட்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது, 5ஜி மற்றும் 6ஜி இணைய வேகத்திற்கு இடைப்பட்டதாக செயல்படும்.

5.5 ஜி சிறப்பம்சங்கள்:

தற்போதைய 5 ஜி இணைய சேவையை விட 10 மடங்கு அதிக வேகத்தைக் கொண்டது. இதன்மூலம், 4k/8k விடியோக்களைக் கூட சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஒரே நேரத்தில் பல சாதனங்களுடன் இணையத்தில் தடங்கல் ஏற்படாமல் இணைத்துக் கொள்ள முடியும்.

லைவ் ஸ்ட்ரீமிங், ஏஐ பயன்பாடு மற்றும் கிளவுட் சேவைகளுக்கான டேட்டா போன்றவை மிக எளிதாக மாறும்.

எங்கெல்லாம் கிடைக்கும்?

5.5 ஜி நெட்வொர்க் சேவை தற்போது சில நாடுகளில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, சீனா, பின்லாந்து, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் இது அறிமுகப்படுத்தப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5.5ஜி/5ஜி-அட்வான்ஸ்டு தொழில்நுட்பச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவை, முழுப் பயன்பாட்டுக்கு வர சில காலம் எடுக்கும்.

5.5G பயன்படுத்துவது எப்படி?

5.5ஜி சேவை Snapdragon 8 Gen 3 அல்லது Snapdragon X75 மோடம் போன்ற புதிய பிராசஸர்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகின்றது.

இந்தச் சேவைக்கென தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் மென்பொருள் அப்டேட் மூலம் 5.5ஜி/5ஜி-ஏ நெட்வொர்க் சிக்னல் மூலமும் இது செயல்படும். ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள டவர்களில் சில மேம்படுத்துதல்களைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் 5.5ஜி இணைய சேவை வணிகப் பயன்பாட்டிற்கு வர தாமதமாகும் என்றே கூறப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தாண்டின் இறுதியில் அல்லது அடுத்தாண்டில் இதனைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

Summary

5.5G internet service (5G Advanced), featuring enhanced speeds compared to 5G, is set to be launched in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.