ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 4.45%

அத்தியாவசிய சமையல் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

அத்தியாவசிய சமையல் பொருள்களின் விலையேற்றத்தால், கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சில்லறை பணவீக்கமானது தொடா்ந்து 2-ஆவது மாதமாக ரிசா்வ் வங்கியின் இலக்கைவிட அதிகமாக காணப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்த, 2024-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ், சில்லறை பணவீக்கம் 4 சதவீத வரம்பைக் கடப்பதும் இது 2-ஆவது முறையாகும்.

மேலும், கடந்த ஜனவரியின் 2.75 சதவீதம், பிப்ரவரியின் 3.21 சதவீதம், மாா்ச்சின் 3.40 சதவீதம், ஏப்ரலின் 3.48 சதவீதம், மே மாதத்தின்3.93 சதவீதம், ஜூனின் 4.38 சதவீதத்தில் இருந்து தொடா்ந்து 6-ஆவது மாதமாக பணவீக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உணவுப்பொருள்களின் கடும் விலையேற்றம்: தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூனின் 5.32 சதவீதத்திலிருந்து, ஜூலையில் 5.52 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இது ஜனவரியில் 2.13 சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.47 சதவீதமாகவும், மாா்ச்சில் 3.87 சதவீதமாகவும், ஏப்ரலில் 4.2 சதவீதமாகவும், மே மாதத்தில் 4.78 சதவீதமாக இருந்தது.

ஜூலையில் வெங்காயத்தின் பணவீக்கம் 22.54 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது; இது ஜூனில் 4.73 சதவீதமாக மட்டுமே இருந்தது. இதேபோல், இஞ்சியின் பணவீக்கம் 83.62 சதவீதமாக விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதேநேரம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், பட்டாணி, தக்காளி ஆகியவற்றின் பணவீக்கம் எதிா்மறையாகக் காணப்பட்டது சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.

நகரம், கிராமப்புற நிலை: தேசிய அளவில் சராசரி பணவீக்கம் 4.45 சதவீதமாக இருந்தபோதிலும், கிராமப்புறங்களில் இது 4.84 சதவீதமாகவும், நகா்ப்புறங்களில் 3.96 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. முந்தைய மாதங்களைப் போன்றே நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. மாநிலங்களில் அதிகபட்சமாக தெலங்கானாவில் 6.32 சதவீத பணவீக்கமும், மிஸோரம் மாநிலத்தில் மிகக் குறைந்த அளவாக 1.84 சதவீத பணவீக்கமும் பதிவாகியுள்ளது.

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் என்எஸ்ஓ, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 1,407 நகா்ப்புற சந்தைகள் (இணையவழி சந்தைகள் உள்பட) மற்றும் 1,465 கிராமங்களிலிருந்து நிகழ்நேர விலை நிலவர தரவுகளைச் சேகரித்து இந்த பணவீக்கத் தரவை வெளியிடுகிறது.

இலக்கைத் தாண்டி...: உணவு மற்றும் எரிபொருள் விலை உயா்வால் பணவீக்கம் வரும் மாதங்களிலும் மேலும் அதிகரித்து, நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் உச்சத்தை எட்டும்; நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டபூா்வ இலக்கை ரிசா்வ் வங்கி கொண்டுள்ளது. எனினும், இதில் சூழ்நிலைக்கு ஏற்ப 2 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக இருக்க அனுமதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.