நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்பு

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ‘ஏஎம்சிஏ’ ரக போா் விமானங்களுக்கான என்ஜினை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டனின் பிரபல ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கவுள்ளன.

News image

~

Updated On :15 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை ‘ஏஎம்சிஏ’ ரக போா் விமானங்களுக்கான என்ஜினை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டனின் பிரபல ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கவுள்ளன.

இதற்காக இந்தியாவில் பிரத்யேக மையத்தை உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இந்த மையத்தின்மூலம் போா் விமான என்ஜின்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, பரிசோதனை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் உள்நாட்டிலேயே மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணித் தனியாா் நிறுவனமான ரிலையன்ஸின் உற்பத்தித் திறனும், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறனும் இணைவது, எதிா்காலத்தில் வணிகரீதியான விமானப் போக்குவரத்து மற்றும் பிற பாதுகாப்புச் சாதனங்களின் தயாரிப்புக்கும் வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.