சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் அறிமுகம்! சிறப்புகள் என்னென்ன?

கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் சிறப்புகள் மற்றும் விலை குறித்து...

News image

கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் - படம் / நன்றி - கூகுள்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 5:59 pm IST

கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

கையடக்கக் கணினி போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில், ஃபிளெக்ஸ் திரை, டென்சோன் ஜி 6 சிப்செட், பின்புறம் 3 முதன்மை கேமராக்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

கூகுள் பிக்சல் 11, பிக்சல் 11 ப்ரோ, பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்.எல். ஆகியவற்றுடன் கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளது. பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1,86,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளப் பக்கத்திலும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்திலும் கிடைக்கிறது.

பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் சிறப்புகள்

8 அங்குல ஃபிளெக்ஸ் திரை கொண்டது.

6.5 அங்குல ஆக்‌ஷுவா கவர் டிஸ்பிளே உடையது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.

திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3600 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

48 மெகா பிக்சல் திறனுடன் மூன்று முதன்மை கேமராக்கள் உள்ளன. 5 மடங்கு அதிகமாக ஜூம் செய்துகொள்ளலாம்.

ஆன்டிராய்ட் 17 ஓஎஸ் கொண்டது.

தூசி மற்றும் நீர் புகாத்தன்மைக்காக IP68 திறன் உடையது.

16GB (RAM) உள்நினைவகம் + 512GB நினைவகம் கொண்டது.

ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் வகையில் கூகுள் ஏஐ உடையது.

4,806mAh பேட்டரி திறன் உடையது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 24 மணிநேரத்திற்கு நீடிக்கும். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 30W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 239 கிராம்.

ஆலிவ் வண்ணத்தில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.