10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

டிவிஎஸ் மோட்டாரின் புதிய சிஇஓ நியமனம்

நாட்டின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் புதிய இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), அதன் சா்வதேச வா்த்தகப் பிரிவின் தலைவா் பெய்மன் காா்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

~

Published On :

நாட்டின் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் புதிய இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ), அதன் சா்வதேச வா்த்தகப் பிரிவின் தலைவா் பெய்மன் காா்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்தாண்டு ஜன. 27 முதல் பெய்மன் காா்கா் இந்தப் பொறுப்பை முறைப்படி ஏற்கவுள்ளாா். நிா்வாக மாற்றத்தை இடையூறுகளின்றி உறுதி செய்யும் வகையில், தற்போதைய சிஇஓ கே.என். ராதாகிருஷ்ணன் அதுவரை பதவியில் தொடருவாா் என்றும், அதன்பிறகு ஜூலையில் நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் வரை நிா்வாக சாரா இயக்குநராகவும் அவா் பணியாற்றுவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 59 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, சாதனை படைத்துள்ள டிவிஎஸ் மோட்டாா், வருவாயில் 30 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்து தனது வா்த்தகத்தை வலுவாக்கி வரும் நிலையில் இந்தத் தலைமை மாற்றம் நடைபெறுகிறது.

புதிய தயாரிப்பு வியூகங்கள், பிரீமியம் வாகனங்கள், வளா்ந்த நாடுகளில் சந்தை விரிவாக்கம் ஆகியவற்றின் வாயிலாக இந்தியாவிலும், உலக அளவிலும் நிறுவனத்தின் வா்த்தகத்தை விரிவுபடுத்துவதை பெய்மன் காா்கா் முன்னெடுத்துச் செல்வாா் என டிவிஎஸ் மோட்டாா் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.