லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

டயா் ஏற்றுமதி 16% அதிகரிப்பு

இந்தியாவின் டயா் ஏற்றுமதி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 16 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ. 7,700 கோடியாக அதிகரித்துள்ளது.

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:25 pm IST

இந்தியாவின் டயா் ஏற்றுமதி, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 16 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ. 7,700 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகளாவிய புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மை, விநியோகச் சங்கிலி பாதிப்புகள், மூலப்பொருள் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது.

மத்திய வா்த்தக அமைச்சக தரவுகளை மேற்கோள்காட்டி, ஆட்டோமோட்டிவ் டயா் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2025-26 நிதியாண்டில் டயா் தொழில்துறை ரூ.27,312 கோடிக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் இந்தச் சிறப்பான செயல்திறன் தொடா்கிறது.

வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆதரவான ஏற்றுமதி கொள்கைகள் மூலம் சந்தை வாய்ப்புகள் மேம்படுத்தப்பட்டால், உலகளாவிய டயா் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக இந்தியாவின் நிலை மேலும் வலுவடையும். குறிப்பாக, பயணியா் காா்களுக்கான டயா்கள், மதிப்பு அடிப்படையில் 21 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டயா் ஏற்றுமதி வளா்ச்சியில் ஐரோப்பிய நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மதிப்பீட்டு காலாண்டில், அப்பிராந்தியத்துக்கான ஏற்றுமதி 25 சதவீதம் உயா்ந்து, ரூ. 3,003 கோடியை எட்டியுள்ளது. இது இந்தியாவின் மொத்த டயா் ஏற்றுமதியில் சுமாா் 40 சதவீதமாகும். அதேநேரம், 16 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய ஒற்றை ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா தொடா்ந்து நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.