விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பட்ஜெட் எதிரொலி: சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image
- PTI
Updated On :2 பிப்ரவரி 2026, 5:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

நேற்று பங்குச் சந்தைகள் கடும் சரிவைத் தொடர்ந்து இன்றும்(பிப். 2) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,555.68 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 226.03 புள்ளிகள் குறைந்து 80,496.91 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 116.35 புள்ளிகள் குறைந்து 24,709.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் என்டிபிசி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, ட்ரென்ட் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. இவை 1.79 சதவீதம் வரை சரிவுடன் வர்த்தகமாயின.

அதேநேரத்தில் லார்சன் & டூப்ரோ, பிஇஎல், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டிகோ ஆகியவை 2.5 சதவீதம் வரை உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப்100, ஸ்மால்கேப்100 குறியீடுகள் முறையே 1.1 சதவீதம், 1.5 சதவீதம் சரிவில் உள்ளன.

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பங்குகளுக்கான பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேலும் நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேலும் சரிந்தன. நிஃப்டி ஐடி தவிர அனைத்துத் துறைகளும் சரிந்தன.

பட்ஜெட் தாக்கம் இன்றும் இருந்து வருவதனால் பங்குச்சந்தைகள் எதிர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.