

புதுதில்லி: விநியோகம் குறித்த கவலைகள் தணிந்ததால், இன்றறைய ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ.110 குறைந்து ரூ.5,100 ஆக உள்ளது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜனவரி மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம் 16,723 லாட் வர்த்தகத்தில், பேரலுக்கு ரூ.110 குறைந்து ரூ.5,100 ஆக சரிந்தது.
பிப்ரவரி மாத ஒப்பந்தமும் 5,076 லாட் வர்த்தகத்தில், பேரலுக்கு ரூ.94 குறைந்து ரூ.5,125 ஆக சரிந்தது.
வெனிசுவேலா தொடர்பான அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உலக அளவில், கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. பிப்ரவரி மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 0.91% குறைந்து $56.61 ஆக வர்த்தகமானது. அதே நேரத்தில் நியூயார்க்கில் மார்ச் மாத ஒப்பந்தத்திற்கான ப்ரென்ட் கச்சா எண்ணெய் 0.59% குறைந்து $60.34 ஆக சரிந்தது.
வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகளிடம் 30-50 மில்லியன் பேரல், உயர்தர எண்ணெயை, அமெரிக்க பெறுவதற்கான அதிரடித் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதையடுத்து, விநியோகத் தடைகள் தணிந்ததால், கச்சா எண்ணெய் விலை சரிந்தது, மூன்று வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச நிலைக்கு சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.