3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! நிதி சேவைகள், ஆட்டோ பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி...
Stock Market Updates: Sensex falls 150 pts, Nifty below 26,150
கோப்புப் படம்
Updated on
1 min read

பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும்(ஜன. 7, புதன்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,620.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 47.59  புள்ளிகள் குறைந்து 85,008.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. முன்னதாக சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17.50 புள்ளிகள் குறைந்து 26,161.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 பங்குகளில் 18 பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகபட்சமாக 1.3 சதவீதம் சரிவு, தொடர்ந்து பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி, ஹெச்யுஎல், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட், சன் பார்மா, எல்&டி, எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

மாறாக, டைட்டன் (3.7 சதவீதம் உயர்வு), எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் எம், எடர்னல், ஆர்ஐஎல், டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் உயர்வைச் சந்தித்து வருகின்றன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.31 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.28 சதவீதமும் உயர்ந்தன.

துறைகளில், நிஃப்டி நிதிச் சேவைகள் குறியீடு அதிகபட்சமாக 0.4 சதவீதம் சரிந்தது. தொடர்ந்து நிஃப்டி ஆட்டோ குறியீடு 0.3 சதவீதம், நிஃப்டி தனியார் வங்கி குறியீடு 0.2 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

அதேநேரத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 1 சதவீதமும், மெட்டல் 0.7 சதவீதமும், எஃப்எம்சிஜி 0.16 சதவீதமும் உயர்ந்தன.

Summary

Stock Market Updates: Sensex falls 150 pts, Nifty 26,150

Stock Market Updates: Sensex falls 150 pts, Nifty below 26,150
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது! - இபிஎஸ், அன்புமணி கூட்டாக அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com