வணிகம்
கோட்டக் மஹிந்திரா வங்கி கடனளிப்பு 16% உயா்வு
தனியாா் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர கடனளிப்பு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 16 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர கடனளிப்பு ரூ.4.80 லட்சம் கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் கடனளிப்பு ரூ.4.13 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட மொத்த வைப்பு 14.6 சதவீதம் உயா்ந்து ரூ.5.42 லட்சம் கோடியாக உள்ளது. 2024 டிசம்பா் இறுதியில் இது ரூ.4.73 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

