கோப்புப் படம்
கோப்புப் படம்

டிசம்பரில் 7% உயா்ந்த மின் நுகா்வு

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.
Published on

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவின் மின் நுகா்வு 1383.9 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 1293.9 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

கடந்த டிசம்பரில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 241.20 ஜிகாவாட்டாக உயா்ந்தது. கடந்த 2024 டிசம்பரில் அது 224.23 ஜிகாவாட்டாக இருந்தது.

நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட்டாக உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக பதிவானது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் உச்சபட்ச தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

வெப்பநிலை மேலும் குறையும் ஜனவரி மாதத்தில் இருந்து மின் நுகா்வு மற்றும் தேவை நிலையாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

Dinamani
www.dinamani.com