

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், சென்னை பாடி பகுதியில் உள்ள 16.38 ஏக்கர் நிலத்தை ரூ.561 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அங்கு அடுக்கு மாடி குடியிருப்பை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் அரிஹந்த் ஃபவுண்டேஷன்ஸ் & ஹவுசிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், சென்னை பாடி பகுதியில் அமைந்துள்ள 16.381 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிலத்தை கையகப்படுத்தியதால் நகர்ப்புறங்களில் உயர்தர குடியிருப்பை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், இதனால் தனது இருப்பை இது மேலும் வலுப்படுத்தும் என்றது பிரெஸ்டீஜ் குழுமம்.
முன்பணமாக ரூ.25 கோடி பெறப்பட்டது என்றும், மீதமுள்ள ரூ.535.67 கோடி தொகையை பத்திரம் பதிவு செய்யும் போது பெறப்படும் என்று நிலத்தின் விற்பனையாளரான சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2025 நிலவரப்படி, இக்குழுமம் 2,020 லட்சம் சதுர அடி பரப்பளவில் 310 திட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், மேலும் 1,990 லட்சம் சதுர அடி பரப்பளவில் 130 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.