

புதுதில்லி: பங்குச் சந்தையில் நிலவிய மந்தநிலைக்கு மத்தியில், இந்தியாவின் அதிகமதிப்புள்ள முதல் 10 நிறுவனங்களில் முதல் 7 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.3,63,412.18 கோடியாக சரிந்தது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய வரிக் கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்டவையால், இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சரிந்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மதிப்பில் சரிவைச் சந்தித்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.1,58,532.91 கோடி குறைந்து ரூ.19,96,445.69 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.96,153.61 கோடி குறைந்து ரூ.14,44,150.26 கோடியாகவும், பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ. 45,274.72 கோடி குறைந்து ரூ.11,55,987.81 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மதிப்பு ரூ. 18,729.68 கோடி குறைந்து ரூ.5,97,700.75 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மூலதனம் ரூ.18,728.53 கோடி குறைந்து ரூ.5,53,912.03 கோடியாகவும், டிசிஎஸ்-இன் சந்தை மதிப்பு ரூ.15,232.14 கோடி குறைந்து ரூ.11,60,682.48 கோடியாகவும், இன்போசிஸின் சந்தை மூலதனம் ரூ.10,760.59 கோடி குறைந்து ரூ.6,70,875 கோடியாகவும் உள்ளது.
இருப்பினும் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.34,901.81 கோடி அதிகரித்து ரூ.10,03,674.95 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ.6,097.19 கோடி அதிகரித்து ரூ.5,57,734.23 கோடியாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.599.99 கோடி அதிகரித்து ரூ.9,23,061.76 கோடியாகவும் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக தொடர்ந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.