

எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் 3-வது காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம், கடந்த ஆண்டை விட 11% சரிந்து ரூ.4,076 கோடியாகக் குறைந்துள்ளது.
டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஆண்டை விட 13.3% அதிகரித்து ரூ.33,872 கோடியாக இருந்தது. நிலையான நாணய மதிப்பின் அடிப்படையில், நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 4.8% வளர்ச்சி கண்டது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையான மாதங்களில் அதன் நிகர லாபம் ரூ.4,747 கோடியாகவும், வருவாய் ரூ.33,360 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் புதிய ஒப்பந்தங்கள், ஆண்டுக்கு ஆண்டு 43% அதிகரித்து $3,006 மில்லியனாக உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் வருவாய், முந்தைய காலாண்டில் இருந்த $100 மில்லியனிலிருந்து அதிகரித்து $146 மில்லியனாக இருப்பதாக தெரிவித்தது.
நிறுவனத்தின் வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலிருந்து வரும் வருவாய் முறையே 8.1% மற்றும் 14.4% அதிகரித்துள்ளது. அதே சமயம் உயிர் அறிவியல் துறையிலிருந்து வரும் வருவாய் இந்தக் காலாண்டில் 2% குறைந்துள்ளது.
ஈவுத்தொகை அறிவிப்பு:
3-வது காலாண்டு முடிவுகளுடன், நிதியாண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக பங்குக்கு ஒன்றுக்கு ரூ.12 என அறிவித்தது எச்.சி.எல்.
ஈவுத்தொகையைப் பெறத் தகுதியுள்ள பங்குதாரர்களைத் தீர்மானிப்பதற்கான பதிவுத் தேதி ஜனவரி 16 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு ஜனவரி 27ஆம் தேதியன்று ஈவுத்தொகை வழங்கப்படும் என்றது நிறுவனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.