கோப்புப் படம்
கோப்புப் படம்

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக, 2025 டிசம்பர் மாதம் சில்லறைப் பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.33% உயர்ந்ததுள்ளது.
Published on

புதுதில்லி: காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு காரணமாக, 2025 டிசம்பர் மாதம் சில்லறைப் பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.33% உயர்ந்ததுள்ளது.

நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 0.71% இருந்தது. இதற்கு முந்தைய அதிகபட்ச அளவு செப்டம்பர் மாதத்தில் 1.44% ஆக இருந்தது.

நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் உணவுப் பணவீக்கம், நவம்பரில் -3.91% உயர்ந்திருந்தாலும், தொடர்ந்து 7வது மாதமாக -2.71% எதிர்மறையாகவே நீடித்தது.

2025 டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கம் அதிகரித்ததற்கு காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், முட்டை, மசாலாப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் பணவீக்கம் அதிகரித்ததே முக்கியக் காரணம் என்று நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவுகளை வெளியிடும்போது தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் தொடர்ந்து 4-வது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச வரம்பிற்குக் கீழே உள்ளது.

கோப்புப் படம்
டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!
Summary

Retail inflation rose to a three-month high of 1.33 per cent in December 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com