டிசிஎஸ் நிகர லாபம் 14% சரிவு!

டிசிஎஸ் நிகர லாபம் 14% சரிவு!

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 13.91 சதவீதம் சரிந்துள்ளது.
Published on

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 13.91 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.10,657 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 13.91 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,380 கோடியாக இருந்தது. 2025 ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான முந்தைய இரண்டாவது காலாண்டில் இது ரூ.12,075 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளா்கள் எண்ணிக்கை டிசம்பா் 31, 2025 நிலவரப்படி 11,151 குறைந்து 5,82,163-ஆக உள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 4.86 சதவீதம் உயா்ந்து ரூ.67,087 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் இது ரூ.63,973 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com