

மும்பை: மற்றொரு ஏற்ற இறக்கமான வர்த்தக அமர்வில் இன்று ஆட்டோமொபைல், நுகர்வோர் சாதனங்கள், பார்மா மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தால் நிஃப்டி 25,750-க்கு கீழே சென்று முடிவடைந்தன.
உலகளாவிய சாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், உள்நாட்டு குறியீடுகள் முந்தைய அமர்வில் மீண்டு, வலுவான நிலையில் தொடங்கின. இன்றைய வர்த்தகத்தில் நாள் முழுவதும் இரு குறியீடுகளும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள்ளேயே வர்த்தகமாகி முடிவில் சரிந்தன.
காலாண்டு வருவாய் குறித்து நிறுவனங்களின் பலவீனமான தொடக்கம், சந்தை மனநிலையை மந்தமாக செயல்பட வைத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 615.38 புள்ளிகள் சரிந்து 83,262.79 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 250.48 புள்ளிகள் சரிந்து 83,627.69 ஆகவும், நிஃப்டி 57.95 புள்ளிகள் சரிந்து 25,732.30 புள்ளிகளாக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2% சரிந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு 0.5% உயர்ந்தன.
நிஃப்டி-யில் டிரென்ட், எல்&டி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும், அதே வேளையில் ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்தன.
துறைவாரியாகப் பார்க்கும் போது, தகவல் தொழில்நுட்பம், ஊடகம், பொதுத்துறை வங்கிகள், உலோகம் உள்ளிட்ட துறைகள் உயர்ந்தும் அதே சமயம் எஃப்எம்சிஜி, மூலதனப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், மருந்து மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவை 0.3 முதல் 0.5% வரை சரிந்தன.
பங்குச் சார்ந்த நடவடிக்கையில், செளவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் அங்கீகார கடிதம் கிடைத்த நிலையில் சிக்கல் லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் 5% உயர்ந்தன.
எல்&டி பங்குகள் 3% சரிந்த நிலையில் ஜிடிபிஎல் ஹத்வே பங்குகளும் 8% வரை சரிந்தன. பிபிசிஎல் இடமிருந்து மிக பெரிய ஆர்டரைப் பெற்றதைத் தொடர்ந்து, விஏ டெக் நிறுவனத்தின் பங்குகள் 1% உயர்ந்தன.
டிக்சன் டெக்னாலஜிஸ், ட்ரெண்ட், கோத்ரெஜ் பிராபர்டீஸ், பிஏஎஸ்எஃப், வேர்ல்பூல், ஐடிசி, ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ், ஐஆர்சிடிசி, செரா சானிட்டரிவேர், சிக்னேச்சர் குளோபல் இந்தியா உள்ளிட்ட 220க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார புதிய குறைந்தபட்ச விலையை எட்டியது.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமாயின. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1.86% உயர்ந்து 65.06 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.