

புதுதில்லி: அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டிசம்பர் 2025ல் முடிவடைந்த 3வது காலாண்டில், அதன் வாராக் கடன் குறைந்ததாலும், முக்கிய வணிகம் மேம்பட்டதாலும், அதன் நிகர லாபம் 56.2% உயர்ந்து ரூ.1,365 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி, கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.874 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ.8,409 கோடியிலிருந்து ரூ.9,672 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் லாபம், டிசம்பர் 2024 காலாண்டில் இருந்த ரூ.2,266 கோடியிலிருந்து ரூ.2,603 கோடியாக மேம்பட்டுள்ளது. வட்டி வருமானமும் ரூ.7,112 கோடியிலிருந்து ரூ.8,172 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் 3வது காலாண்டில் ரூ.2,789 கோடியாக இருந்த நிகர வட்டி வருமானம், நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் 18% அதிகரித்து ரூ. 3,299 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் மொத்த வாராக் கடன், கடந்த வருடம் இருந்த 2.55 சதவீதத்திலிருந்து, டிசம்பர் 2025 வரையான ஆண்டின் இறுதியில் மொத்தக் கடனில் இது 1.54 சதவீதமாக குறைந்துள்ளது.
வங்கியின் மொத்த வர்த்தகம், கடந்த ஆண்டின் 3வது காலாண்டு இறுதியில் இருந்த ரூ.5.42 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 18.7% உயர்ந்து ரூ.6.44 லட்சம் கோடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.