

மும்பை: ரிசர்வ் வங்கியானது, ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் (SMBC) இந்தியாவில் முழு உரிமையுடனான ஒரு துணை நிறுவனத்தை அமைப்பதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
எஸ்எம்பிசி நிறுவனம், புதுதில்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள தனது 4 கிளைகள் மூலம் இந்தியாவில் வங்கித் தொழிலை நடத்தி வருகிறது.
இந்தியாவில் உள்ள அதன் தற்போதைய கிளைகளை மாற்றி, முழு உரிமையுடைய துணை நிறுவனத்தை அமைப்பதற்காகவே இந்த கொள்கை ரீதியான ஒப்புதலை வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2025ல், எஸ்எம்பிசி நிறுவனம், யெஸ் வங்கியில் 24.22% பங்குகளைப் கையகப்படுத்தி, அதன் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்தது. அதே நேரத்தில், எஸ்பிஐ வங்கியிடம் 10 சதவீதத்திற்கும் அதிகமான அதன் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.