

பங்குச் சந்தைகள் இன்று(ஜன. 14, புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,358.54 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 34.37 புள்ளிகள் குறைந்து 83,593.32 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. முன்னதாக சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.85 புள்ளிகள் குறைந்து 25,731.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
30 சென்செக்ஸ் நிறுவனங்களில், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டர்குளோப் ஏவியேஷன், சன் பார்மா மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகின்றன.
டாடா ஸ்டீல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபம் ஈட்டி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.05 சதவீதமும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.51 சதவீதமும் உயர்ந்தன.
துறைகளில் நிஃப்டி மெட்டல் குறியீடு 1.5 சதவீதமும் ஆயில் மற்றும் கேஸ் 0.37 சதவீதமும் உயர்ந்தது. அதேநேரத்தில் ரியாலிட்டி 1 சதவீதமும் பார்மா 0.4 சதவீதமும் சரிந்தன.
வெளிநாட்டுப் பங்குகள் அதிகமாக வெளியேற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றின் எதிரொலியால் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.
செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச எண்ணெய் அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெய், 0.49 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 65.15 அமெரிக்க டாலராக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து நாளை(ஜன .15) மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகிய இரு பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.