3வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 7% சரிந்த விப்ரோ!

விப்ரோ, 3வது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 7% சரிவைக் கண்டதாக அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் 8% சரிந்தன.
விப்ரோ நிறுவனம்
விப்ரோ நிறுவனம்
Updated on
1 min read

புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, நிதியாண்டின் 3வது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 7% சரிவைக் கண்டதாக அறிவித்ததை தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் 8% சரிந்தன.

பிஎஸ்இ-யில் 7.95% சரிந்து ரூ.246ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது, ​​இது 9.54% சரிந்து ரூ.241.75 ஆக முடிவடைந்தன.

என்எஸ்இ-யில் 8% சரிந்து ரூ.245.95ஆக முடிவடைந்த நிலையில், வர்த்தக நேரத்தின் போது, ​​இந்த பங்கு 9.68% குறைந்து ரூ.241.55 ஆக சரிந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,282.64 கோடி குறைந்து ரூ.2,57,977.45 கோடியாக உள்ளது.

மறுசீரமைப்பு செலவுகள் மற்றும் தொழிலாளர் சட்ட அமலாக்கங்களால் ஏற்பட்ட சுமையால், நிதியாண்டின் 3வது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 7% சரிவைக் கண்டு ரூ.3,119 கோடியாக உள்ளதாக விப்ரோ அறிவித்தது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3,353.8 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

விப்ரோ நிறுவனம்
அறிமுகமான நாளிலேயே 77% உயர்வுடன் வர்த்தகமான பாரத் கோக்கிங் கோல்!
Summary

Shares of IT services major Wipro tanked 8 per cent on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com