

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், நிதியாண்டின் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 83% அதிகரித்து ரூ.46.37 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பஜாஜ் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 25.31 கோடியாக இருந்தது.
செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 30.57% அதிகரித்து ரூ. 306.09 கோடியாக இருந்தது. அதே வேளையில் மொத்த செலவுகள் 20.9% அதிகரித்து ரூ. 254.95 கோடியாக உள்ளது.
மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய, மொத்த வருமானம், இந்த காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 28.66% அதிகரித்து ரூ. 311.38 கோடியாக உள்ளது.
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் (புதன்கிழமை) பிஎஸ்இ-யில் முந்தைய நாள் முடிவிலிருந்து 5.46% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.247.55 என்ற விலையில் வர்த்தகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.