

டுகாட்டி நிறுவனம் நடப்பாண்டில் 10 வகையான புதிய பைக்குகளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
டுகாட்டி நிறுவனம் வரும் மாதங்களில் புதிய வி2, வி4 பிளாட்ஃபார்ம்களில் 10 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் எட்டு பெருநகரங்களில் டீலர்ஷிப்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, டுகாட்டி பனிகேல் வி4 ஆர் பைக் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த பைக்கை வாங்கியுள்ளார். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ. 84.99 லட்சம். இதன் தொடர்ச்சியாகப் பிற பைக்குகளும் அறிமுகமாக உள்ளன.
மான்ஸ்டர் வி2 மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் வி2 இந்தாண்டு அறிமுகமாகின்றன. டயாவெல் வி4 ஆர்எஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட மல்டிஸ்ட்ராடா வி2 ரேலி ஆகியவையும் பட்டியலில் உள்ளன. மேலும், பனிகேல் வி4 லம்போர்கினி, டெஸ்மோ 450 எம்.எக்ஸ் ஆகிய பைக்குகளும் அறிமுகமாகின்றன. இவற்றில் சில புதிய பைக்குகளாகவும், சில ஏற்கெனவே உள்ள மாடல்களின் சிறப்புப் பதிப்புகளாகவும் இருக்கும்.
நாடு முழுவதும் தில்லி, மும்பை, புணே, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் டுகாட்டி டீலர்ஷிப்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.