

தங்கம், வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை காலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 10,960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 50,000-ம் அதிரடியாக அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.