/

நான்கு நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது; சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 104.35 புள்ளிகள் சரிந்து 78,180.72 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 31.65 புள்ளிகள் சரிந்து 24,398.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

Sensex - file picture

Updated On :7 ஜூலை 2026, 5:48 pm IST

மும்பை: ஆசியப் பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான சூழலைப் பின்பற்றி, உள்ளூர் பங்குச் சந்தையில் ஏற்பட்ட லாபப் பதிவை முன்னிட்டு நான்கு நாள் தொடர் ஏற்றத்திற்குப் முற்றுபுள்ளி வைத்து, வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

இருப்பினும், தகவல் தொழில்நுட்ப பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால், சந்தையின் சரிவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 379.85 புள்ளிகள் உயர்ந்து 78,664.92 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 104.35 புள்ளிகள் சரிந்து 78,180.72 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 31.65 புள்ளிகள் சரிந்து 24,398.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில், ஜூன் காலாண்டு வருவாய் வளர்ச்சி சந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாததால் 'ட்ரெண்ட்' நிறுவனத்தின் பங்குகள் 12.42 சதவீதம் சரிந்தன. மேலும் அதானி போர்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. மறுபுறம் எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டைட்டன், எடர்னல் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

இதற்கிடையில், நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.4 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.55 சதவீதமும் சரிந்தன.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 4.91 சதவீதம் சரிந்தது. ஜப்பானின் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் கலவையான போக்கை கைப்பிடித்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் குறிப்புகள் வெளியாகவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும், ஆசிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட பலவீனமான போக்கும், வர்த்தக அமர்வின் பிற்பகுதியில் முதலீட்டாளர்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை விற்பனை செய்து லாபத்தை ஈட்டினர். இருப்பினும், ஜூன் காலாண்டு நிறுவனங்களின் நிதி முடிவுகள் வெளியாகவுள்ளதை முன்னிட்டு, சரிவிலிருந்து மீண்டு பிறகான வர்த்தகத்தில், தொழில்நுட்ப பங்குகள் உயர்ந்தன.

நேற்று (திங்கிள்கிழமை) அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், திங்கள்கிழமையன்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 243.03 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய கச்சா பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.22 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 72.87 அமெரிக்க டாலராக அதிகரித்தது.

Summary

Market benchmark indices Sensex and Nifty ended lower on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.