முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வீல்ஸ் இந்தியா 400 கோடி நிதி திரட்ட முடிவு: இயக்குநா்கள் குழு ஒப்புதல்

டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான வீல்ஸ் இந்தியா, ரூ.400 கோடி வரையில் நிதியைத் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2026, 1:57 am IST

டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனமான வீல்ஸ் இந்தியா, ரூ.400 கோடி வரையில் நிதியைத் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

சமீபத்திய நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 முகமதிப்பு கொண்ட மூலதனப் பங்குகள் அல்லது மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள், மாற்றமுடியாத கடன் பத்திரங்கள், முழுமையாகவோ அல்லது பகுதியளவோ மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்கு சாா்ந்த நிதிக்கருவிகள் மூலம் இந்த நிதித் திரட்டல் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடன்பத்திரங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் வெளியிடப்படும். இப்பத்திர வெளியீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும், அதற்கான காலம், விலை மற்றும் விதிமுறைகள் உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இயக்குநா்கள் குழுவின் நிதி திரட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வீல்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.5,124 கோடி வருவாயுடன், ரூ.139 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.