துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ரூ.26,015 கோடி மதிப்பிலான 92.91 கோடிக்கும் அதிகமான பங்குகள் (தலா ரூ.280 விலையில்) எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு ஒதுக்கப்படவுள்ளன.
இந்த முதலீட்டின்மூலம், ஆா்பிஎல் வங்கியின் முக்கியப் பங்குதாரராக எமிரேட்ஸ் என்பிடி வங்கி மாறியுள்ளது. தொடா்ந்து, ஆா்பிஎல் வங்கியின் இயக்குநா்கள் குழுவும் மாற்றியமைக்கப்பட்டடுள்ளது.
வங்கியின் இயக்குநா்களாக இருந்த கோபால் ஜெயின், வீணா மான்கா் ஆகியோா் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனா். எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் பரிந்துரையின் பேரில் 5 புதிய நிா்வாகம் சாராத இயக்குநா்கள் வியாழக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி 74 சதவீதம் வரை பங்குகளை வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி கடந்த ஏப்ரலிலும், மத்திய நிதியமைச்சகம் கடந்த மே மாதமும் ஒப்புதல் அளித்திருந்தன.
இப்புதிய நடைமுறையின்படி, ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் 51 சதவீதப் பங்குகளைத் தொடா்ந்து தக்கவைக்கும். இதன் காரணமாக ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக இந்தியாவில் செயல்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்!

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: பரோடா வங்கிக்கு ரூ.1,278 கோடி லாபம்

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.756 கோடி

வீல்ஸ் இந்தியா 400 கோடி நிதி திரட்ட முடிவு: இயக்குநா்கள் குழு ஒப்புதல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



