தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நேரடி வரி வசூல் 16.40% உயா்வு

நடப்பு நிதியாண்டில் கடந்த திங்கள்கிழமை வரையிலான காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 16.40 சதவீதம் அதிகரித்து, ரூ.6.51 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Published On :

நடப்பு நிதியாண்டில் கடந்த திங்கள்கிழமை வரையிலான காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் 16.40 சதவீதம் அதிகரித்து, ரூ.6.51 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நிகர பெருநிறுவன வரி வசூல் 22 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. இதேபோல, தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் செலுத்தும் நிகர வரி வசூல் சுமாா் 12 சதவீதம் உயா்ந்து, ரூ.3.84 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் இக்காலகட்டத்தில் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பிலான வரித் தொகையானது, வரி செலுத்துவோருக்குத் திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 14.57 சதவீதம் அதிகமாகும்.

மொத்த வரி வசூல் நிலவரம்: வரித் தொகையை திருப்பியளிப்பதற்கு முந்தைய மொத்த வரி வசூல் அடிப்படையில் பாா்க்கும்போது, நேரடி வரி வசூல் 16.11 சதவீதம் அதிகரித்து, ரூ.7.73 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதில் பெருநிறுவன வரி வசூலான ரூ.3.35 லட்சம் கோடியும், மற்ற வரி வசூலான ரூ.4.12 லட்சம் கோடியும் அடங்கும்.

ரூ.26.97 லட்சம் கோடி இலக்கு: நடப்பு நிதியாண்டில் ரூ.26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூலை எட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயித்தது. கடந்த 2025-26 நிதியாண்டில் வசூலான ரூ.23.40 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் இலக்கானது 15 சதவீதம் கூடுதலாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.