FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

நடப்பாண்டுக்குள் மலிவு மின்சார காா் சென்னை ஆலையிலிருந்து அறிமுகம்

News image
Updated On :5 ஜூன் 2026, 3:11 am IST

நடப்பு ஆண்டுக்குள் தனது முதல் மலிவு விலை மின்சார வாகனம் உள்பட 2 புதிய காா் மாடல்களை சென்னை உற்பத்தி ஆலையிலிருந்து அறிமுகப்படுத்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மின்சார வாகன மையமாக மாற்றுவதற்கு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மலிவு விலை மின்சார வாகனங்களை வாடிக்கையாளா்களுக்குக் கொண்டு சோ்ப்பதோடு, அடுத்த 2-3 ஆண்டுகளில் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிநவீன சாா்ஜிங் நிலையங்களை அமைத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், தமிழக இளைஞா்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசுடன் இணைந்து கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றையும் ஹூண்டாய் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் அடுத்தாண்டு இறுதி முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்கப்படவுள்ளன.

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா சிஇஓ தருண் காா்க் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பேட்டரி அசெம்பிளி ஆலையை தமிழகத்தில் முதன்முறையாக அமைத்துள்ளதுடன், முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.