வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்வோம்: டாடா மோட்டார்ஸ்

வணிக வாகனங்களுக்கான மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலீடு செய்யும்.

News image

Tata Motors

Updated On :7 ஜூன் 2026, 7:14 pm IST

புதுதில்லி: வணிக வாகனங்களுக்கான மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலீடு செய்யும் என்று அதன் தலைவர் என். சந்திரசேகரன் இன்று தெரிவித்தார்.

அதே வேளையில், தூய்மையான போக்குவரத்து முறைக்கு மாறுவதற்கு மின்சாரம், ஹைட்ரஜன் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்களின் கலவை அவசியம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

2025-26 ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையில் பங்குதாரர்களிடம் உரையாற்றிய போது, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், போக்குவரத்து சார்ந்த தயாரிப்புகள் மற்றும் அவற்றுக்கான சேவைகள் வழங்கப்படும் விகிதங்கள் மாற்றியமைத்து வருவதாகவும் தெரிவித்தார். தூய்மையான ஆற்றலை நோக்கிய மாற்றம், பாதுகாப்பு குறித்த அதிகரித்த எதிர்பார்ப்புகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியின் மறுசீரமைப்பு ஆகியவை போட்டித்தன்மையை மறுவரையறை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பூஜ்ஜிய உமிழ்வு கொண்ட மின்சார வணிக வாகனங்களின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் அதே வேளையில், அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனப் பிரிவுகளுக்கு ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றார்.

வலுவான நிதி நிலைமை, மேம்படும் வருவாய் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும் திறனில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றால், நிறுவனம் லாபகரமான வளர்ச்சிப் பயணத்தைத் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

2025-26 நிதியாண்டில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக ரூ. 83,855 கோடி வருவாயைப் பதிவு செய்தது. இதுவே கடந்த நிதியாண்டில் ரூ. 76,359 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 9.8 சதவீத வலுவான வளர்ச்சியாகும்.

Summary

Tata Motors will keep on investing in electric and hydrogen-based technologies for commercial vehicles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.