மும்பை: வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதம் அதன் வாகன விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில் 30,238 வணிக வாகனங்களை விநியோகித்திருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், நிறுவனத்தின் உள்நாட்டு வணிக வாகன விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனையான 27,936 வாகனத்திலிருந்து 31% அதிகரித்து 36,599 வாகனங்களாக உள்ளது. அதேபோல், சர்வதேச விற்பனையும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 83% உயர்ந்து 4,206 வாகனங்களாக உள்ளது.
2026–27 நிதியாண்டின் ஜூன் காலாண்டில், டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை 1,08,488 வாகனங்களாக இருந்தது. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவான 85,606 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
மொத்த விற்பனையில், உள்நாட்டு விற்பனையில் 1,00,348 வாகனங்களாக பதிவானது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விற்பனையான 79,522 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இது 26% வளர்ச்சியாகும். அதேபோல், சர்வதேச வணிக வாகன விற்பனையானது 6,034 வர்த்தக வாகனங்களிலிருந்து 8,140 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது.
2026-27 நிதியாண்டை நாங்கள் நேர்மறையான தொடக்கத்துடன் அணுகி வருகிறோம். முதல் காலாண்டின் ஒவ்வொரு மாதத்திலும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியான இரட்டை இலக்கை பதிவு செய்து வருகிறோம். அதிகரித்து வரும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்த காலாண்டில் மொத்த விற்பனை 1,08,488 வாகனங்களாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 27% வளர்ச்சியாகும் என்றார் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் வாங்.
Summary
Commercial vehicle maker Tata Motors Ltd on Wednesday reported a 35 per cent growth in vehicle sales.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










